search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்"

    நெல்லை மாவட்டத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    கேரளாவில் சமீபத்திய மழை வெள்ளம் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    நெல்லை மாவட்டத்திலும் முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை பகுதியில் சுகாதார குழுவினர் முகாமிட்டுள்ளார்கள்.

    அந்த வழியே வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் உரிய மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×